உலக பணக்காரராக தொடர்ந்து பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார் !!!!
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அளவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து...


உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அளவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்துகளின் நிகர மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 200 கோடி ஆகும். அவர் உலக அளவில் ஒரு இடம் முன்னேறி 39–வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அளவில், அவருக்கு அடுத்த இடத்தில், திலீப் சாங்வி, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர்.
உலக பணக்காரராக இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 40 கோடி ஆகும். இந்த பட்டியலில் 290 பேர் புதுமுகங்கள் ஆவர். அவர்களில் 71 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
பட்டியலில், 90 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களில், சிவ நாடார் (உலக அளவில் 66–வது இடம்), இந்துஜா சகோதரர்கள் (69–வது இடம்), லட்சுமி மிட்டல் (82–வது இடம்), குமார் மங்கலம் பிர்லா (142–வது இடம்), கவுதம் அதானி (208–வது இடம்), சுனில் மிட்டல் (208–வது இடம்), அனில் அம்பானி (418–வது இடம்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்