24Km நடந்தே வேலைக்குச் செல்லும் பெண்!!
Berck-ville (Pas-de-Calais) யில் வசிக்கும் இந்தப் பெண், வேலைக்குச் சென்று வருவதற்காகத் தினமும் இரண்டு முறை பன்னிரண்டு கிலோமீற்றர்கள் தூரத்...

இரண்டு மணித்தியலங்களிற்கு மேல் நடந்தே Christelle Blondel எனும் இந்தப் பெண் வேலைக்குச் செல்ல வேண்டி உள்ளது. விடுமுறை வீடுகளைத் துப்பரவு செய்யும் வேலையைச் செய்து வருகின்றார். இவரது வேலை நேரங்களில், இங்கு எந்தப் பொதுப் போக்குவரத்துக்களையும் இவரால் உபயோகிக்க முடியவில்லை. மிகவும் அரிதாகவே இவரிற்கு ஏதாவது சிற்றுந்துகள், நிறுத்தி ஏற்றிக் கொண்டு செல்கின்றன. மதியுந்து விபத்தில் காயமடைந்த இவர் கால்நடையாகச் செல்வதையே பாதுகாப்பாக உணர்கின்றார்.
பொதுப்போக்குவரத்துக்கள் எதனையுமோ அல்லது Navette, கூட்டுப் போக்குவரத்தான covoiturage முறைமையையோ, நகரசபையோ அல்லது மாவட்டசபையோ ஏற்படுத்தவில்லை என்பதே இவரின் ஆதங்கமாக உள்ளது.
பெப்ரவரி மாதம் ஜேம்ஸ் ரொபேட்சன் எனும் 56 வயதுடைய அமெரிக்கக் குடிமகன், வேலைக்குச் சென்று திரும்புவதற்காக 33 கிலோமீற்றர் தூரத்தை நடந்தே செல்வதைப் பெரும் இரக்கத்துடன் பார்த்த பலர், ஒன்றிணைந்து பணம் சேகரித்து, அவரிற்கு ஒரு சிற்றுந்தை வாங்கிக் கொடுத்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயமாக உள்ளது.