மஹிந்தவை காப்பாற்ற பாராளுமன்றத்தை முடக்கிய ஆதரவாளர்கள்!(photos)
மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்றும் தீவிர முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
http://kandyskynews.blogspot.com/2015/04/photos_21.html
மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்றும் தீவிர முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, மஹிந்தவிடம் விசாரணை செய்யவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த விசாரணையில் மஹிந்தவை காப்பாற்றுவதற்காக, அவரது ஆதரவாளர்களான 56 பாராளுமன்ற உறுப்பினர்கள், இரவிரவாக பாராளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
பாராளுமன்றம் நேற்று ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சபையின் நடுவே அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்த இவர்கள், இரவிரவாக அங்கேயே தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என்று கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவதாக உத்தரவாதம் வழங்கும் பாராளுமன்றத்தை விட்டு விலகிச் செல்லப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.















Sri Lanka Rupee Exchange Rate