ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து தென் கொரிய பிரதமர் தனது பதவியிலிருந்து இராஜினாமா

தென்கொரிய பிரதமர் லீ வான் கூ தமது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். தென் கொரியாவில் ஊழலில் ஈடுபட்டதாக பிரதமர் மீது குற்றச்சாட்டு முன்வை...


தென்கொரிய பிரதமர் லீ வான் கூ தமது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

தென் கொரியாவில் ஊழலில் ஈடுபட்டதாக பிரதமர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து அவர் தமது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிடும் வரை பிரதமர் தமது அலுவலகத்தில் கடமை புரிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் தென்கொரிய செல்வந்தர் ஒருவர் மீது விசாரணைகளை முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொணடிருந்தார்.

குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக தெரிவித்து அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட 7 பேரின் பெயர்களை குறித்து வைத்திருந்தார்.

பிரதமர், குறித்த வர்த்தகரிடமிருந்து 27,000 அமெரிக்க டொலர்கள் லஞ்சமாக பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தனது உயிரை விடுவதற்கும் தயார் என தென் கொரிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related

உலகம் 1873709859908143286

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item