பாராளுமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதியில் ஆர...


பிக்குகள் உள்ளிட்ட சிலர் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் பேரணியாக செல்வதற்கு முயற்சித்தபோது பொலிஸார் அவர்களை வழிமறித்துள்ளனர்.
பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அறிவித்தனர்.
எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாது கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
தமது உத்தரவிற்கு கட்டுப்படாவிட்டால் குறைந்த பட்ச வலுவை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு நேரிடும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.