சீன - பாக்கிஸ்தானுக்கு இடையேயான புகையிரத மற்றும் வாயு பறிமாற்றல்
நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த சீன பாக்கிஸ்தானுக்கு இடையேயான வீதி, புகையிரத பாதை மற்றும் வாயு விநியோகத்திற்கான குழாய் என்பன நிர்மாணிக்க ச...


நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த சீன பாக்கிஸ்தானுக்கு இடையேயான வீதி, புகையிரத பாதை மற்றும் வாயு விநியோகத்திற்கான குழாய் என்பன நிர்மாணிக்க சீனா தீர்மானித்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாக்கிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் இது தொடர்பான அறிவித்தலை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சீன பாக்கிஸ்தானுக்கு இடையேயான பொருளாதார நடவடிக்கைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாக்கிஸ்தானிய குவாடருக்கும் சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியங்களை இணைக்கும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ள இந்த இணைப்பை நிர்மாணிப்பதற்காக 46 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாரிய திட்டத்தின் மூலம் சீனா மிக இலகுவாக இந்து மா சமுத்திரத்துடனும் அதற்கு அப்பாலும் நேரடியான தொடர்பினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.