வீட்டு வேலைக்காக மலேசியா சென்ற 30 பெண்கள்: விபச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் அவலம்
மலேசியாவில் வீட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி விபசாரத்தில் தள்ளப்பட்டு 30க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளத...
http://kandyskynews.blogspot.com/2015/04/30.html
திருச்சி லால்குடி நெய்குப்பை இந்திரா நகரை சேர்ந்த ரகீம் மனைவி சுதா (41) என்பவருக்கு, திருச்சி கீழப்புலிவார்டுரோடு பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி மனைவி லதா (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுதாவிடம், எனக்கு தெரிந்தவர் மலேசியாவில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தோடு வீட்டு வேலைக்கு ஆள் கேட்கிறார், செல்கிறாயா? என லதா கேட்டுள்ளார்.
சுதாவும் அதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, கடந்த ஜனவரி 12ம் திகதி சுதாவை, கூனிபஜார் பகுதியை சேர்ந்த அமீர்ஜான் மனைவி சகிலாபானு மற்றும் சென்னை திருவல்லிக்கேணி நீலாபாய் ஆகியோர் மூலம் லதா மலேசியாவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
சுதா அங்கு சென்ற பின்னர் தான் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக மலேசியா அனுப்பியது தெரியவந்துள்ளது.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சுதா அங்கிருத்து தப்பியோடி, இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு தற்காலிக பாஸ்போர்ட் வழங்கிய இந்திய தூதரகம் அவரை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.
பின்னர் கடந்த 4 நாள் முன்பு திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சுதா இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
அதில், என்னை வீட்டு வேலைக்கு என மலேசியா அனுப்பிவிட்டு விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றனர்.
இதற்கு காரணமான லதா, சகிலாபானு, நீலாபாய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இவர்கள் இதேபோல சுமார் 30 தமிழக பெண்களை மலேசியாவுக்கு அனுப்பி விபசாரத்தில் தள்ளியுள்ளனர் என்றும் அவர்கள் அங்கிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் பொலிசார் நடத்திய அதிரடி வேட்டையில், லதா, சகிலாபானு ஆகியோரை நேற்று கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள லதா, சகிலாபானு ஆகியோர் மீது ஏற்கனவே விபசார தொழிலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதற்கு மூளையாக செயல்பட்ட திருவல்லிக்கேணி நீலாபாய் என்பவரை தேடி திருச்சி பொலிசார் சென்னை விரைந்துள்ளனர்


Sri Lanka Rupee Exchange Rate