தினந்தோறும் மாயமாகும் டெல்லி குழந்தைகள்… விபச்சாரத்தில் தள்ளப்படும் அவலம்: ஷாக் தகவல்
டெல்லியில் தினமும் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் வரை காணாமல் போவதாக அம்மாநில பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது அன்ற...


டெல்லியில் தற்போது அன்றாடம் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தொலைத்துவிட்டு காவல்நிலையத்தை நாடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிலும் கடந்த மார்ச் 15ம் தேதி வரை மட்டும் 1,120 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
இதில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் அதாவது 621 பேர் தொலைந்து போயுள்ளனர்.
கடத்தப்படும் பெண் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலியல் தொழிலில் இறக்கப்பட்டு விடுகின்றனர்.
இவர்களை கடத்திச் செல்வதற்காகவே டெல்லியில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
இவர்களின் தொடர்புகள் நாடு முழுவதிலும் பரவியிருப்பதால் இவர்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன என்று டெல்லி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், காணாமல் போகும் குழந்தைகளில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டும் டெல்லி பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே காணாமல் போவதற்கு, பள்ளிக்குச் செல்ல விருப்பமின்மை, குடும்பத்தகராறு உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.