மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற சதிமுயற்சி!- சந்திரிகா

மக்களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்ற முயற்சிக்கும் சதித்திட்டம் இடம்பெறுகின்றது. இழந்த உரிமைகளை வென்றெடுக்க, அட...

மக்களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்ற முயற்சிக்கும் சதித்திட்டம் இடம்பெறுகின்றது. இழந்த உரிமைகளை வென்றெடுக்க, அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டுக்கேற்ற மிகச் சரியான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தாய்மாரை கெளரவிக்கும் நிகழ்வில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதானது.

இலங்கையில் இன்று ஒற்றுமையின் சூழலினை உருவாக்கிக் கொடுத்ததும் மூவின மக்களின் ஒற்றுமையினை வென்றெடுத்து கொடுத்ததும் இந்த நாட்டிற்கான உயர்ந்த தியாகம் செய்த இராணுவ வீரர்களே ஆவர்.

பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் படும் துயரம் சொல்லிலடங்காதது. நாட்டிற்காக தமது உயிரினை மாய்த்த இராணுவ வீரர்களின் தாய்மார் வேதனையடைவதையும் அதேபோல் நாட்டிற்காக பிள்ளைகளை பெற்றெடுத்ததை நினைத்து பெருமையும் அடையவேண்டும்.

எனினும் கடந்த காலத்தில் இந்த யுத்த வெற்றியினை ஒரு சிலர் அல்லது ஒரு தனி நபர் மட்டுமே உரிமை கொண்டாடிக் கொண்டிந்தமையும் யுத்த வெற்றியின் மூலம் ஒரு குடும்பம் மட்டும் நன்மையடைந்ததையும் நாம் அவதானித்தோம்.

அந்த நபர் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதிகாரத்தினை மீண்டும் பெற்றுக்கொள்ள பாரிய சதித்திட்டம் இடம்பெறுகின்றது.



இராணுவத்தின் வெற்றியினை சுயநலத்திற்காக பயன்படுத்தி அதில் வாழ்கின்றனர். நாம் நாட்டையும் மக்களையும் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்துள்ளோம் எனினும் இந்த பத்து ஆண்டுகளின் நாட்டின் அரச வேலை முதல் அனைத்து விடயங்களிலும் அடிமட்டம் தொடக்கம் மேல் மட்டம் வரை ஊழல் பரவியிருக்கின்றது.

எமது கையில் இன்று மீண்டும் நாடு ஒப்படைக்கப்பட்டாலும் மக்களுக்கான தூய்மையான நாடாக மாற்றியமைப்பதற்கு மிக நீண்ட காலம் அவசியம் அதற்கு மக்களும் பொறுமையுடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் இலங்கை பத்தாயிரம் கோடி ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனில் உள்ளது. இவற்றில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

புதிய அரசாங்கம் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் நாட்டின் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் நூறு நாட்களில் நாட்டை மீட்டெடுக்க முடியுமா என எனக்குத் தெரியாது.

இந்நிலையில் பொதுத் தேர்தல் ஒன்றிற்கு நாடு முகம் கொடுக்கவுள்ளது. இதுவரையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியில் திருடர்களும் ஊழல் மோசடிக்காரர்களுமே பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம்படுத்தினர்.

ஆனால் இம்முறை பொதுத் தேர்தலில் நாட்டிற்கு பொருத்தமான திறந்த தலைவரை மக்களே தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

Related

இலங்கை 7823845978284866872

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item