சீகிரியாவில் காதல் செய்த யுவதி! இரண்டு வருடம் சிறை
சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கி சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட தமிழ் யுவதி ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளத...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_34.html

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கி சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட தமிழ் யுவதி ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பைச் சேர்ந்த 23 வயதான சின்னத்தம்பி உதேனி என்ற யுவதியே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளார். உதேனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வரும் உதேனி, சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது வரலாற்றுச் சிறப்பு மிக்க சீகிரிய கண்ணாடிச் சுவரில் ஆங்கில எழுத்துக்களால் தனது காதலன் பெயரை கிறுக்கி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து குற்ற எழுத்துக்களை அழிக்க முடியாது என்று கூறியுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த யுவதி, தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது இரண்டு வருடகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.