அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டோம்! மஹிந்தவாக மாறிய மைத்திரி
சிறிலங்காவுக்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க சில நாடுகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_71.html

சிறிலங்காவுக்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க சில நாடுகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
பொருளாதார உடன்படிக்கைகள் மூலம் சிறிலங்கா மீது அழுத்தம் பிரயோகிக்க வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளா்ர.
1948ம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சிறிலங்கா சுதந்திரம் அமைந்தது. இவ்வாறு மீண்டும் வெளிநாட்டு சக்திகள் நாட்டை ஆக்கிரமிக்க இடமளிக்க முடியாது.
இவ்வாறான சதி முயற்சிகள் குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளோம்.
சில பெரிய நாடுகள் சிறிய நாடுகளின் விவகாரங்களில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு தலையீடு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அபிவிருத்தி உதவிகள் என்ற போர்வையில் இந்த தலையீடுகள் இடம்பெற்று வருகிறது.
அபிவிருத்தி உதவி, பாதுகாப்பு உதவி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு என்ற பல்வேறு பரிமாணங்களில் இவ்வாறு தலையீடு இடம்பெறுகிறது.
புதிய தந்திரோபாயங்கள் பயன்படுத்தி நாடுகள் மீது தலையீடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பொருளாதார அபிவிருருத்தி திட்டங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தெரிவு அடிப்படையில் செயற்பட்டு வருவதாக மைத்திரிபால மேலும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate