யுத்தக் குற்றச்சாட்டு அடிப்படையில் 150 பொஸ்னியர்களை நாடு கடத்துகின்றது அமெரிக்கா!
பொஸ்னியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கிய குழப்பத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் சம்பந்தப் பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சு...


இது குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவில் வதிவிட அனுமதி பெற்றுள்ள சுமார் 300 பொஸ்னியர்கள் யுத்த சமயத்தில் அமெரிக்காவுக்கு இடம்பெயர முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டதாகவும் இதன் அடிப்படையில் இதில் அரைவாசிக்கும் அதிகமானவர்களைத் திருப்பி அனுப்புவது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில் பலர் 1995 ஆம் ஆண்டு ஸ்ரெப்ரெனிக்கா இல் சுமார் 7000 பொஸ்னியாக் ஆண்களும் சிறுவர்களும் கொல்லப் பட்ட இனவழிப்பில் தொடர்பு கொண்டவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டதாகவும் நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ஏஜன்ஸிக்காக யுத்தக் குற்ற விசாரணை செய்து வரும் மிக்கேல் மக்குயின் கூறுகையில், குறுக்கு விசாரணையை ஆழமாகச் செய்யும் போது மேலும் மேலும் ஆவணங்கள் கிடைத்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும் இந்த மனிதாபிமானம் அற்ற பாதகச் செயலில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்து புதிய வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கையில் தனக்கு மிக அதிர்ச்சியாக இருப்பதாகவும் மிக்கேல் குறிப்பிட்டுள்ளார்.