தரக்குறைவாக நடத்தப்பட்ட சங்கக்காரா! போராட்டத்தில் களமிறங்கும் ரசிகர்கள்
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காராவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கி...


இங்கிலாந்தின் உள்ளூர் அணியான சரே அணியில் விளையாட சங்கக்காரா லண்டன் சென்றிருந்தார்.
அப்போது விமான நிலையத்தில் தான் ஒரு குடிவரவுத்துறை அதிகாரியால் தரக்குறைவாக நடத்தப்பட்டதாக சங்கக்காரா கவலை தெரிவித்திருந்தார்.
இதனை சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் வலைதளத்தில் அவரே தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக, கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.