ரணிலை நாடாளுமன்றத்தில் வைத்து கெட்ட வார்த்தையால் திட்டிய வாசுதேவ நாணயக்கார!
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் நாடாளுமன்றத்தில் ...


இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது
நாணயக்கார ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்ப முயன்றபோது ரணில் விக்கிரமசிங்க அதனை தடுக்க முயன்றார்.
இதன்போது கோபமடைந்த வாசுதேவ நாணயக்கார என்னை உன்னால் உட்கார வைக்கமுடியுமா “பக்கயா”? என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமருக்கு ஒழுங்குப்பிரச்சினை என்றால் என்ன? நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரம் என்றால் என்ன? என்பது தெரியாது என்றும் வாசுதேவ குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கருத்துரைத்த சபாநாயகர் நாடாளுமன்ற அமர்வுகளை மாணவர்களும் பார்ப்பதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்கத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்