மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள்! மேலும் ஆதாரங்களை வழங்கும் ஹெல உறுமய
முன்னான் ஜனாதிபதி அரசாங்கத்தின் ஆவணங்களில் மேலும் சிலவற்றை ஜாதிக ஹெல உறுமய பிரதிநிதிகள் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜாதிக...


முன்னான் ஜனாதிபதி அரசாங்கத்தின் ஆவணங்களில் மேலும் சிலவற்றை ஜாதிக ஹெல உறுமய பிரதிநிதிகள் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதிகள் சிலர் இன்று காலை கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு செயலகத்தில் இந்த ஆவணங்களை ஒப்படைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பிலான ஆவணங்களே இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி செயலக சிற்றுண்டிச்சாலையின் பற்றுச்சீட்டுகள் பொரளை பழைய பத்திரிகை விற்பனை கடையில் இருந்து அண்மையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.