நல்லாட்சி, நல்லிணக்கத்தின் பின்னணியில் பிரிவினைவாதமே செயற்படுகின்றது!– மஹிந்த ராஜபக்ச

நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தின் பின்னணியில் பிரிவினைவாதமே செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமாதானம...

நல்லாட்சி மற்றும் நல்லிணக்கத்தின் பின்னணியில் பிரிவினைவாதமே செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமாதானம், வெள்ளைத் தாமரை, செங்கல்லுடன் செங்கல் போன்ற பல்வேறு வசனங்களைப் பயன்படுத்தி நாட்டு மக்களின் உரிமைகளை இல்லாமல் செய்த தரப்பினர், நல்லிணக்கம் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.
அன்று சீ.வி. குணரட்ன போன்ற அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் கொல்லப்பட்டனர்.
எனது ஆட்சியின் கீழ் புலிகளிடமிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தேன்.
இந்த சுதந்திரம் காரணமாக கொழும்பில் சுதந்திரமாக நமக்கு கிடைத்துள்ளது.

கடைக்குச் சென்று ஒரு ஜோடி சப்பாத்தைத் தெரிவு செய்து, எனது அரசாங்கத்தினால் அலங்காரம் செய்யப்பட்ட கொழும்பு நகரில் சுற்றித் திரிய அவகாசம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சுதந்திரமாக சுற்றித் திரியும் போது சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த நான் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்க முயற்சிக்கப்படுகின்றது மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தெஹிவளை கல்கிஸ்ஸ நகரசபை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற அமரர் சீ.வி.குணரட்ன நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 2277210495652327542

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item