அரசாங்கத்தின் வருமான வீழ்ச்சியே நிதி நெருக்கடிக்கான காரணம்!- பொருளியல் நிபுணர்கள்
அரசாங்கத்தின் வருமான வீழ்ச்சியே நிதி நெருக்கடிக்கான காரணமாகும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_883.html
அரசாங்கத்தின் அன்றாட செலவுகளை செய்து கொண்டே அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் அபிவிருத்திப் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் மந்த கதியில் இயங்கி வருவதாகவும் இதனால் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வரையறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதிகளவு கடன் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதனால் வட்டி வீதம் உயர்வடையும் எனவும், இந்த ஆண்டின் இறுதியில் பணவீக்கம் மேலும் உயர்வடையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்க ஊழிர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட செலவுகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்கு நிகராக அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை.
இதனால் உக்கிர பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, அரசாங்கம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.