20வது திருத்தத்துக்கு அமைச்சர் திகாம்பரம் எதிர்ப்பு
இலங்கையின் அமைச்சரவை நேற்று இரவு நிறைவேற்றிய 20வது திருத்தச் சட்டத்துக்கு தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பி.திகாம்பரம் த...
http://kandyskynews.blogspot.com/2015/06/20_9.html
அமைச்சரவை ஏற்றுக்கொண்ட யோசனையின்படி 225 ஆசனங்களில் 125 ஆசனங்கள் கலப்பு முறையிலும் 75 ஆசனங்கள் விகிதாசார அடிப்படையிலும், 25 ஆசனங்கள் தேசியப்பட்டியல் மூலமும் நிரப்பப்படவுள்ளன.
இதன்போது அதிக தமிழ் மக்களை கொண்டுள்ள நுவரெலிய மஸ்கெலிய தொகுதியில் இருந்து இந்திய வம்சாவளி தமிழ்ப் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியாத நிலை ஏற்படும்.
நாடாளுமன்ற ஆசனங்களை 255 ஆக அதிகரிக்கும் போதே நுவரெலிய மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நான்கு தமிழ் பிரதிநிதிகள் தெரிவாக முடியும்.
அமைச்சரவை நிறைவேற்றியுள்ள யோசனையின்படி 225ஆசனங்களுக்குள் நுவரெலியாவில் ஒருவரும் மஸ்கெலியாவிலும் ஒருவருமாக இரண்டுபேர் மாத்திரமே தெரிவாக முடியும்.
எனவே இதனை தாம் எதிர்ப்பதாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்டார்.
இதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையில் இருந்தவர்கள் ஆட்சேபனையை வெளியிட்டனர்.
எனினும் தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் மலையக மக்கள் பிரதிநிதித்துவங்களை மாறிமாறி பதவிக்கு வரும் அரசாங்கங்கள் கவனிக்க தவறிவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில் இன்று இது தொடர்பில் தெளிவாக்கல் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.