சூடான் அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை ஹெலிகொப்டர்கள்

சூடான் அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் தென் சூடானின...

சூடான் அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் தென் சூடானின் அமைதி காக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளன.
எம்.ஐ.17 ரக மூன்று ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானிகளின் சேவை வழங்கப்பட உள்ளது.
விமானிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட 104 விமானப்படையினர் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக இரண்டு விமானப் படை அதிகாரிகள், பத்து விமானப் படை வீரர்கள் சூடானை சென்றடைந்துள்ளனர்.
எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள் மூன்று ஏற்கனவே விமானம் ஒன்றின் மூலம் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்க பல நாடுகள் விண்ணப்பித்திருந்த போதிலும் இலங்கைப் படையினருக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானிகளின் அனுபவம், தொழில்நுட்ப அறிவு, அனுபவம் மிக்க படையினரின் ஒழுக்கம், தொழில்சார் நிபுணத்துவம் போன்ற காரணிகளின் அடிப்படையில் தெரிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரில் இலங்கை விமானப்படைக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஒரு தொகுதி படையினர் விரைவில் தென் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 6583525240143049969

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item