உலக சாதனை படைத்த ரணில்: ஜயந்த ஹேரத்
நாடாளுமன்றத்தில் சிறுபான்மை நபரான ரணில் விக்ரமசிங்க உலக சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...


நாடாளுமன்றத்தில் சிறுபான்மை நபரான ரணில் விக்ரமசிங்க உலக சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிர்ப்பானவர்களுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை பயமுறுத்திகொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி ஒவ்வொரு நாட்களிலும் அரசியல் அதிகாரத்தை கொள்ளையடித்துக் கொண்டே உள்ளது.
இனியும் இதற்கு இடமளிக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கொடுமைகளை மேலும் பொறுத்துக்கொண்டு செயற்பட முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.