பெற்றோரின் அலட்சியம்: தன்னைத்தானே சுட்டுக்கொண்ட 2 வயது குழந்தை
அமெரிக்காவில் பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு விர்ஜினியாவின் புறநகர் பகுதியில் உள...

http://kandyskynews.blogspot.com/2015/05/2.html

அமெரிக்காவின் தெற்கு விர்ஜினியாவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டைப் பார்வையிடுவதற்காக கடந்த 25ம் திகதி, தங்கள் 2 வயது மகனை கூட்டிக் கொண்டு அவனது பெற்றோர் சென்றுள்ளனர்.
அப்போது படுக்கை அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த 2 வயது குழந்தை மேஜையில் இருந்த துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்தது.
ஆர்வத்தோடு அந்த துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவனது விரல் துப்பாக்கி விசையை அழுத்த துப்பாக்கி குண்டு அந்த குழந்தையின் தலையை துளைத்துச்சென்றது.
சத்தம் கேட்டு அலறியடித்து ஓடி வந்த சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன், தலையில் ஏற்பட்ட பயங்கர காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.