பசில் ராஜபக்ச அடிப்படை உரிமை மனு: விசாரணைகள் 4ம், 5ம் திகதிகளில்..
ஸ்காட்லாந்தில் வேகமாக வரும் இரயிலை பொருட்படுத்தாமல் இரண்டு சிறுவர்கள் நடைமேடையை கடக்கும் காட்சி பார்ப்பவர்களை பதபதைக்க செய்வதாக உள்ளது. ஸ...


ஸ்காட்லாந்தின் ஈடன்பர்க்(Edenburg) இரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
பின்னர் இரயில் ஒன்று நிலையத்தை நோக்கி வருவதை கண்டதும் வேகமாக தண்டவாளத்தை கடக்கின்றனர்.
சில வினாடிகள் தாமதித்திருந்தாலும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். இந்நிலையில் இதுபற்றி பிரித்தானிய போக்குவரத்து போலிசார் ஒருவர் கூறுகையில், வேகமாக வரும் இரயிலை கடக்கும் பழக்கம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
மேலும் இது கவலை அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார். தண்டவாளத்தை கடப்பது சட்டவிரோதம் என தெரிந்தும் இது போன்ற செயல்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் தவறி விழுந்தால் வாழ்க்கையே முடிந்துவிடும் என்பதை அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.