பசில் ராஜபக்ச அடிப்படை உரிமை மனு: விசாரணைகள் 4ம், 5ம் திகதிகளில்..
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை எதிர்வரும் ஜூன் 4ஆம் 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது இது தொடர்பான அ...

http://kandyskynews.blogspot.com/2015/05/4-5_28.html

இது தொடர்பான அறிவிப்பை நேற்று இந்த மனு அழைக்கப்பட்ட போது உயர்நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் குழு விடுத்தது.
இந்தக் குழுவில் பிரதம நீதியரசர் கே ஸ்ரீபவன் தலைமையிலான நீதியரசர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
மனுதாரரான பசில் ராஜபக்ச சார்பில் நேற்று ஆஜரான சட்;டத்தரணி ரொமேஸ் டி சில்வாää தமது கட்சிக்காரருக்கு விடுதலையை கோரி மனுவை தாக்கல் செய்வதாக குறிப்பிட்டார்.
இதேவேளை நிதிமோசடி வழக்கு தொடர்பில் பசில் ராஜபக்சவுக்கான விளக்கமறியல் தண்டணையை நேற்று கடுவலை நீதிமன்றம் நீடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமான முறையில் தான் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பசில் ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
திவிநெகுமவில் நிதி மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பசில் ராஜபக்ஷ உட்பட 4 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி சனத் விஜய வர்தன ஊடாக தாக்கல் செய்யபட்டிருந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் அமைச்சரவை, நிதிமோசடிப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மகஸின் சிறைச்சாலை ஆணையாளர், சட்டமா அதிபர் உட்பட 45 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பசில் ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 04 ம் திகதி மற்றும் 5 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.