பெற்ற குழந்தையை நாயை போல் நடத்திய தாய்: சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றிய அவலம்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தையை கொடுமைப்படுத்துவது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தது சர்ச்சையை ...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_754.html

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு ஆடை ஏதும் அணிவிக்காமல் கழுத்தில் கையிற்றை கற்றி நாயைப்போல் தட்டில் உணவு சாப்பிடுவதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இந்நிலையில் அயர்லாந்தை சேர்ந்த சமூக சேவகியான லூர்லீன்(Lurleen) என்பவர் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பெற்ற மகனை நாயை விட கேவலமாக நடத்திய தாய்க்கு தண்டனை வாங்கிதர வேண்டும் என எண்ணி அந்த புகைப்படத்தை தனது முகப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்தவர்கள் அந்த தாய்க்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பொலிசாரிடம் சரணைந்தார்.
இது பற்றி லூர்லீன் கூறுகையில், அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்ததும் எனது இரத்தம் சூடேறிவிட்டது. என்னால் அதை சகித்துகொள்ளமுடியவில்லை.
எனவே அந்த தாய்க்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்கவிரும்பினேன் என்று கூறினார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.