மகிந்த, கோத்தபாயவை விசாரணைக்கு வருமாறு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 24ம் திகதி மஹிந்தவிடம் விசாரணை நட...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_456.html

கடந்த தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சுப் பதவியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்தவே மஹிந்த அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், என்ன முறைப்பாடு யார் முறைப்பாடு செய்தார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் ஊடாக இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்வருமு் 22,23ம் திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.