மகனை துஷ்பிரயோகம் செய்த வீரவன்ச.
16 வயது நிரம்பி நான்கு மாதங்களே ஆகியிருந்த தனது மகனை இலங்கையின் இளைஞர் பிரதிநிதியாக கடந்த வருடம் இடம்பெற்ற World Urban Forum (WUF) மாநா...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_815.html

16 வயது நிரம்பி நான்கு மாதங்களே ஆகியிருந்த தனது மகனை இலங்கையின் இளைஞர் பிரதிநிதியாக கடந்த வருடம் இடம்பெற்ற World Urban Forum (WUF) மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அழைத்துச் சென்றுள்ளது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிசின் இணக்கத்துடன் இவ்வாறு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதானது சட்ட விரோதமானது எனவும் 18 வயதுக்குக் குறைந்த ஒருவரை அவ்வாறு அழைத்துச் சென்றிருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் இன்னொரு உதாரணம் எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வருடம் (2014) இம்மாநாடு கொலம்பியாவில் ஏப்ரல் 5 முதல் 11ம் திகதி வரை இடம்பெற்றிருந்தமையும் ஏற்கனவே போலி ஆவணங்கள் ஊடாக இரு கடவுச்சீட்டுக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகிய விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுதலையாகியிருப்பதும் தற்போது விமல் வீரவன்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate