தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்.
புனே அருகே தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். சிறுவயதில் துன்புறுத்தியதால் தந்தையை பழி தீர்த்ததாக அவ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_807.html

புனே அருகே தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். சிறுவயதில் துன்புறுத்தியதால் தந்தையை பழி தீர்த்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
என்ஜினீயர்
புனே அருகே உள்ள பிம்பிளே சவுடாகர் பகுதியை சேர்ந்தவர் பிரதிப்குமார் (வயது28). தமிழர். ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள பன்னாட்டு மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக உள்ளார். சமீபத்தில் பிரதிப்குமாருக்கு திருமணம் நடந்தது. அவர் ஹிஞ்சேவாடியில் உள்ள விருந்தாவன் பார்க் அடுக்குமாடி கட்டிடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் பிரதிப்குமாரின் தந்தை முருகன் ஊரில் இருந்து மகனை பார்க்க பிம்பிளே வந்தார். சம்பவத்தன்று இரவு முருகன் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கினார்.
தந்தை கொலை
அப்போது திடீரென பிரதிப்குமார் அறையில் இருந்த கத்தியை எடுத்து முருகனை படுக்கையில் வைத்து சரமாரியாக குத்தினார். மேலும் அவரது கழுத்தையும் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் படுக்கையிலேயே பிணமானார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரதிப்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
காரணம் என்ன?
பிரதிப்குமாரின் தந்தை முருகனுக்கு இரண்டு மனைவிகள். பிரதிப்குமாருக்கு 10 வயது இருக்கும் போது, முருகன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரு மனைவிகளுடன் அவர் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், முருகனின் இரண்டாவது மனைவி பிரதிப்குமாரை கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முருகனும் பிரதிப்குமாரை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் சிறுவயதிலேயே அவருக்கு தந்தை முருகன் மீது வெறுப்பு உண்டானது.
அதன்பிறகு தந்தை மீதான கோபம் அவருக்கு தணியவே இல்லை. இதனால் தந்தையை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதுக்குள் புதைத்து வைத்து இருந்தார்.
இந்த நிலையில், புனேக்கு தன்னை பார்க்க தந்தை வருவதை அறிந்த அவர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முருகனை கொலை செய்தார்.
மனைவி உடன் இருந்தால் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என கருதி அவரை முன்கூட்டியே ஊருக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் காவல்
கைதான பிரதிப்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் முருகனின் உடல் அவரது இரண்டாவது மனைவியின் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.


Sri Lanka Rupee Exchange Rate