விகிதாசார தேர்தல் முறைமையே ஜனநாயகத் தன்மை வாய்ந்தது! - சுமந்திரன்
தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்....


தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு, பம்பலப்பிட்டி ஓசன் ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்ற சிறிய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"இந்நாட்டில் பிரதான கட்சிகளின் மூலம் மாத்திரம் ஏற்படுத்தப்படும் தேர்தல் முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவர முடியும். ஆனால், தொகுதிவாரி தேர்தல் முறைமையை விட விகிதாசார தேர்தல் முறைமை ஜனநாயகத் தன்மை வாய்ந்தாகும்" என்று அவர் மேலும் கூறினார்.