அத்ன் மாகாணத்தில் கூட்டுப்படை முன்னேற்றம், ஹூதிகள் முற்றுகை
சவுதி அரேபியாவின் தலைமையிலான கூட்டுப்படாயினரால் ஹூத் கிழர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்தில் கிழர்ச்சியாளர்களின...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_267.html
சவுதி அரேபியாவின் தலைமையிலான கூட்டுப்படாயினரால் ஹூத் கிழர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்தில் கிழர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அத்ன் போன்ற பல மாகாண, பிரதேசங்கள் தற்போது கூட்டுப்படையின் கையின் கீழ் விழுந்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுப்படைகளின் இராணுவப்பேச்சாளர் அஹ்மத் அசீரி பத்திரிகைகளுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கூட்டுப்படையினரின் முற்றுகைக்குள்ளாகி இருக்கும் அத்ன் மாகாணத்தில் இயங்கி வந்த ஹூதிகளுக்கு , சரண் அடைவதை தவிர தப்பிக்கும் மாற்று வழிகள் இல்லை எனத் தெரிவித்தார்.
சஹ்தா, உம்ரான், சன்ஆ போன்ற இடங்களின் உள்ள ஹூதிகளின் இடங்களை இலக்கு வைத்து கூட்டுப்படை போர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடங்களில் சிக்கியுள்ளவர்களுக்கான உடனடி நிவாரனம், மறுத்துவம் என்பன சர்வதேச செம்பிரைச் சங்கம், விசேட வைத்திய குழுக்கலாள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அம்மக்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முற்றுகை இடப்பட்டிருக்கும் ஹூதிகளுக்கு உதவிகள் கிடைக்கக்கூடி அனைத்து வழிகளை தமது படையினர் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.