பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம்
பருவ மழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் எதிர்வரும் 04, 0...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_78.html

பருவ மழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் எதிர்வரும் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர
சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு தொற்று அதிகம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்குளி, கிருலப்பனை, பாமன்கடை, வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் விசேட
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் டொக்டர் ருவன் விஜேமுனி குறிப்பிட்டார்.
இதேவேளை, டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுப்பதற்கு, சூழலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியமானது என கொழும்பு மாநகர சபையின்
பிரதம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.