எந்தவொரு ஊடகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது: தேர்தல்கள் ஆணையாளர்
எந்தவொரு ஊடகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் நேற்று ந...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_566.html

தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
தேர்தலின் போது தனியார் ஊடகங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு 19ம் திருத்தச் சட்டத்தில் இடமில்லை.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரச ஊடகங்களுக்கு, தேர்தல்கள் ஆணையாளரினால் சில கட்டுப்பாடுகளை விதிக்க வழியமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்தில் அவகாசமில்லை.
ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.