அமைச்சின் சொகுசு ஜீப் மறைவிடங்கள் அகப்பட்டது…
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்குச் சொந்தமான மொன்டேரோ வர்க்க அதிசொகுசு வாகனம் ஒன்று வடமேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_614.html
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்குச் சொந்தமான மொன்டேரோ வர்க்க அதிசொகுசு வாகனம் ஒன்று வடமேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் முந்தல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரங்குளி – கடயாமட்ட பிரதேசத்தில் இருந்து இந்த ஜீப் வண்டி மீட்கப்பட்டுள்ளது.
ஜீப் குறித்த தகவல் அறிந்த முந்தல் பொலிஸார் நேற்று (15) இரவு குறித்த உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று வாயிலை திறக்க முயன்றபோதும் முடியவில்லை. பின்னர் இன்று அதிகாலை அங்கு சென்ற பொலிஸார் வாயிலை திறந்து உள்சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியை மீட்டுள்ளனர்.
பிரதி அமைச்சர் ஒருவர் இந்த ஜீப் வண்டியை தனக்கு வழங்கியதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு தான் இந்த வாகனத்தை பயன்படுத்தியதாக அவர் கூறினார். குறித்த ஜீப் முந்தல் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate