ஆயுத விற்பனையில் ஈடுபட்டுவந்த மஹிந்தவின் மருமகன் தலைமறைவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக செயற்பட்ட உதயங்க வீரதுங்க தலைமறைவாகி உள்ளதாக சர்வ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_192.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக செயற்பட்ட உதயங்க வீரதுங்க தலைமறைவாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர் கிழக்கு உக்ரேனில் செயற்படும் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு, உதயங்க வீரதுங்க ஆயுதகளை விநியோகித்ததாக உக்ரேன் ஜனாதிபதி ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ, சிறிலங்கா வெளிவிகார அமைச்சிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் உதயங்க வீரதுங்க தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்திருந்தார்.
ஆனால், அவர் சிறிலங்கா திரும்பியதாகத் தெரியவில்லை என்றும் வெளியுறவு அமைச்சினால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அஜித் பெரேரா கூறினார்.
உதயங்க வீரதுங்க, சிறிலங்கா வந்ததாகவும் தகவல் இல்லை. உலகில் எங்கிருக்கிறார் என்றும் கூறமுடியவில்லை. அவரைக் காணவில்லை' என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உதயங்க வீரதுங்க 8 ஆண்டுகளுக்கு மேல் ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியுள்ளார். சாதாரணமாக மூன்று ஆண்டுகள் தான் ஒருவர் ஒருநாட்டில் தூதுவராக இருப்பார்.
ஆனால், இவர் மஹிந்த நெருங்கிய உறவினர் என்ற காரணத்திற்காக, இவருக்கு அதனையும் தாண்டிய வாய்ப்பு கிடைத்திருந்தது என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
உதயங்க வீரதுங்க என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகனாவார்.
அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றிய உதயங்க வீரதுங்க, ரஷ்யாவில் சிறிலங்கா தூதரகத்துக்கு அருகிலேயே தேனீர் வியாபாரமும் நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate