இலங்கையில் அனைவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள்: கேலி செய்கிறார் மகிந்த
அமைச்சரவையிலுள்ள அனைவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேலி செய்துள்ளார். நாரஹேன்பிட...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_791.html

அமைச்சரவையிலுள்ள அனைவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேலி செய்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் இன்று பிக்குகள் மற்றும் கலைஞர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தேசிய அரசாங்கத்தின் உருவாக்கம், புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியே முன்னாள் ஜனாதிபதி இம்மாதிரியான கேலி பேச்சுக்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு தற்போது தான் ஓய்வெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate