இலங்கையுடன் மோதும் இந்தியா: அட்டவணை அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கிண்ணம் வரை தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வ...


இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கிண்ணம் வரை தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்கான போட்டி அட்டவணைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இதன் படி வருகின்ற யூன் மாதம் இந்திய அணி வங்கதேசம் சென்று ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதைத் தொடர்ந்து யூலை மாதம் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
அடுத்து ஆகஸ்ட் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதன் பின் செப்டம்பரில் இந்திய அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது.
இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களால அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான தொடர் நடக்கும் எனத் தெரிகிறது.
அடுத்த வருடம் ஜனவரியில் அவுஸ்திரேலியா செல்லும் இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் 5 ஒருநாள், 3 ‘டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது.
இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் இந்தியா செல்லும் இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது.
மேலும், ஆசிய அணிகள் பங்கேற்கும் ‘டி–20’ தொடரிலும் இந்தியா விளையாடுகிறது.
இந்த தொடருக்கு பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் ஏப்ரல் 2 வரை நடக்கவுள்ள டி-20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. பிறகு 9வது ஐபிஎல் தொடர் நடக்கும்.