உலககோப்பை: அயர்லாந்து வெற்றி
உலகக் கோப்பை போட்டிகளில் அயர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஒவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து...

உலக கோப்பை போட்டிகளின் 16வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள அயர்லாந்தும், ஐக்கிய அரபு எமிரேட்சும் மோதுகின்றன. இந்தப் போட்டி பிர்ஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
இதனால் பேட்டிங் செய்ய ஐக்கிய அரவு எமிரேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அம்ஜத் அலி, பெரங்கர் களம் இறங்கினர். பெர்கர் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய கிருஷ்ண சந்திரனும் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த குர்ரம் கானும் அம்ஜத் அலியும் நிதானமாக ஆடினர்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷைமன் அன்வர் நிலைத்து நிதானமாக ஆடி 83 பந்துகளில் 106 ரன்களை அடித்தார். இவர் 10 நான்கு ரன்களையும், 1 ஆறு ரன்களையும் எடுத்தார்.
அணி 269 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷைமன் அன்வர், அவுட் ஆனார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை எடுத்திருந்தது. அயர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் நயல் ஓ பிரையன், ஸ்டெர்லிங், சொரன்சென், குசக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். டாக்ரெல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
அயர்லாந்து அணி 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது