தோனி கூறினால் 24 ஆவது மாடியில் இருந்தும் யோசிக்காமல் குதிப்பேன் – இஷாந்த் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி தன்னை 24 ஆவது மாடியில் இருந்து குதிக்குமாறு கூறினால் கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் குதிப்பேன் என்று இ...
http://kandyskynews.blogspot.com/2015/04/24_90.html

இந்திய கிரிகெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாட முடியாமல் நாடு திரும்பினார்.
தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். அவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாட தயாராக உள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் உலக பயணம் பற்றி இஷாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் கலந்து கொள்ள நான் தேர்வாகவில்லை.
ஆனால் 2015 ஆம் ஆண்டு நான் தேர்வாக வாய்ப்புகள் இருந்தும், காயம் ஏற்பட்டதால் விளையாட முடியாமல் போனது” என்று கூறினார்.
மேலும், “சோகத்தில் நான் இருந்தபோது அணித் தலைவர் தோனி எனக்கு மிகுந்த ஆறுதல் அளித்தார். தோனி என்ன சொன்னாலும் நான் செய்வேன்” என்று கூறிய அவர், “தன்னை 24 ஆவது மாடியில் இருந்து குதிக்க சொன்னால் கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் குதிப்பேன்” என்று கூறினார்


Sri Lanka Rupee Exchange Rate