தமிழர் அரசியல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் துரோகம்
தமிழர்கள் சார்ந்த அரசியல் விடயங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குள்ளநரித்தனமாக செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_85.html

- தமிழர்கள் சார்ந்த அரசியல் விடயங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குள்ளநரித்தனமாக செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண சபையில் இணக்கப்பாட்டு அரசியலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு நிபத்தனையுடன் ஆதரவு தெரிவித்திருந்த கூட்டமைப்புக்கு சில அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவதாக முஸ்லிம் காங்கிரஸால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும் வழமை போன்றே தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கையை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளதாக கூட்டமைப்பு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த கல்வியமைச்சை, மஹிந்தவின் ராஜபக்சவின் நெருங்கிய சகாவான ஆரியவதி கலபதிக்கு வழங்கியுள்ளது.
கிழக்கு மாகாணசபை விவகாரத்தில் இத்துடன் மூன்றாவது தடவையாக தமிழர்களை, முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இணக்கப்பாட்டு அரசியல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் கூட்டமைப்புக்கு கல்வி, காணி அமைச்சர்களும், பிரதிதவிசாளர் பதவியும் தருவதாக காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது. இதனை மீறி சிங்களவர் ஒருவர் தற்போது கல்வியமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்த விடயம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும், தமிழர்களிற்குள்ளும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கருத்து வெளியிடுகையில்,
இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களை மூன்றாவது தடவையாக ஏமாற்றியுள்ளது. இவர்களுடன் இனி அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் நினைக்கிறார்கள், பதவிக்காக நாம் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்போம் என. ஏற்கனவே நாம் முதலமைச்சர் பதவியை தருவதாக கூறியபோதும், அவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்தார்கள். ஆளுந்தரப்பிற்கு சேவகம் செய்யும் மனநிலை அவர்களை விட்டு இன்னும் போகவில்லை என குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate