சிறிலங்காவில் கூட்டணி அமைந்து ஆட்சியை பிடித்துள்ள மைத்திரிபாலவும் ரணிலும் அரசியல் களத்தில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆரு...
சிறிலங்காவில் கூட்டணி அமைந்து ஆட்சியை பிடித்துள்ள மைத்திரிபாலவும் ரணிலும் அரசியல் களத்தில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆருடம் வெளியிடப்பட்டுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ததன் பின்னர், நிறைவேற்று பிரதமர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேன போட்டியிடக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ராஜித சேனாரட்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால், ஜனாதிபதி பதவியில் எந்த பிரயோசனமும் இல்லை. ஜனாதிபதி பதவி என்பது பெயரளவிலான பதவியாக மாத்திரமே இருக்கும்.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக எதிர்வரும் தேர்தலில் களமிறக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 8ம் திகதி அதிகாரத்திற்கு வந்தார்.
ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்த பின்னர், உரையாற்றிய அவர், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார்.
அத்துடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் வரப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த 62 லட்சம் மக்கள் அவர் எவ்வித அதிகாரமும் இன்றி இருப்பதை காண விரும்பவில்லை என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.