உலக சாதனையை சமன் செய்த இலங்கையின் சானக வெலிகிடரா
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி20 போட்டியில் சிக்கனமாக பந்து வீசுவதில் தென் ஆப்பிரிக்க வீரர் கிரிஸ் மோரிஸின் சாதனையை சமன் செய்துள்ள...


நேற்று நடந்த உள்ளூர் டி20 போட்டியில் Sinhalese Sports Clubக்கு எதிராக அசத்திய வெலிகிடரா 4 ஓவரில் 2 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் 2 மெய்டன் ஓவர்களையும் வீசினார்.
இதன் மூலம் கடந்த வருடம் 4 ஓவர்களுக்கு 2 ஓட்டங்கள், 3 மெய்டன் ஓவர், 2 விக்கெட் என சிக்கனமாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் கிரிஸ் மோரிஸின் சாதனையை வெலிகிடரா சமன் செய்துள்ளார்.
34 வயதான சானக வெலிகிடரா, 21 டெஸ்ட் போட்டி, 10 ஒருநாள் போட்டி, 2 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.