பசில் ராஜபக்ச 24ம் திகதி பொலிஸில் வாக்குமூலம் அளிப்பார்?
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி பொலிஸில் வாக்கு மூலம் அளிப்பார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் ...

அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இவ்வாறு பசில் ராஜபக்ச வாக்கு மூலம் அளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராபஜக்சவின் சட்டத்தரணி உதய ரொசான் டி சில்வாவை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பசில் ராபஜக்ச அமெரிக்காவிலிருந்து வியட்நாம் சென்றுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலக் குறைவினால் அமெரிக்காவில் சில மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பசில் ராஜபக்ச நாட்டை வந்தடைந்தவுடன் கைது செய்யுமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ச வாக்கு மூலம் ஒன்றை அளிப்பார் என்றே அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளதுää கைது தொடர்பில் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
பசில் ராஜபக்ச, 20ம் திகதியின் பின்னர் நாடு திரும்புவார் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் உறுதியான திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில், முன்னிலையாகி வாக்குமூலம் அளிப்பார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.