பிரித்தானியாவை தாக்க திட்டமிட்ட சிறுவன், சிறுமி? காரணம் என்ன?
பிரித்தானியாவில் பல்வேறு தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்த இரண்டு பேரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Blackburn நகரத்தை சே...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_73.html
Blackburn நகரத்தை சேர்ந்த 14 வயது சிறுவனும், Manchester நகரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, சிறுவர்களது இருப்பிடத்தை திடீர் சோதனையிட்ட பொலிசார், அவர்கள் பயன்படுத்திய மடிக்கணனி மற்றும் கைப்பேசிகளை கைப்பற்றியுள்ளனர், மேலும் அவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
கைது குறித்து பேசிய பொலிசார், பல்வேறு தாக்குதல்களை நடத்த அந்த சிறுவன் திட்டமிட்டிருந்ததாகவும், அந்த திட்டத்திற்கு சிறுமி துணை போனதாகவும் தங்களுக்கு கிடைத்த சந்தேகத்திற்குரிய தகவல்களால் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் திகதி துருக்கியில் உள்ள தீவிரவாத கும்பலில் இணைய பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட 9 சிறுவர்களை துருக்கி பொலிசார் கைது செய்திருந்தனர்.
பிரித்தானியாவிலிருந்து தப்பித்த 9 சிறுவர்களுக்கும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டு சிறுவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால், அவர்களை மே மாதம் 28 ஆம் திகதி வரை ஜாமீனில் விடுவிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சிறுமியின் தாயார், தனது மகள் விளையாட்டுத்தனமாக தான் அவ்வாறு தகவல்களை பரப்பினார் என்றும் அவருக்கும் தீவிரவாத கும்பலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate