ஆப்கானுக்கு முதல் வெற்றி
உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_605.html

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி முதல் வெற்றி கனியை சுவைத்தது.
.நியூசிலாந்தில் உள்ள டுனிடின் நகரில் இன்றைய ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.
3–வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் ஸ்காட்லாந்து இதுவரை ஒரு ஆட்டத்திலும் வென்றது கிடையாது. 1999, 2007 உலக கோப்பையில் 8 ஆட்டத்திலும், இந்த போட்டித் தொடரில் 2 ஆட்டத்திலும் ஆக மொத்தம் தான் விளையாடிய 10 போட்டியிலும் தோற்றுள்ளது.
ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மச்சான், ஹக் ஆகியோர் அதிகபட்சமாக தலா 31 ரன்கள் எடுத்தனர். பின்னர் வெற்றிக்கு 211 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாவேத் அகமதியும், மங்கலும் களமிறங்கினர். அகமதி அதிரடியாக விளையாட, மங்கல் நிதானமாக ஆடினார். இதனால் 8வது ஓவரின் போது ஏழு ரன்களுக்கு அவுட்டானார் மங்கல். அடுத்து வந்த ஸ்டனிக்சாய் அதே ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஷென்வாரி களமிறங்கி நிதானமாக விளையாடி அணி வெற்றி பாதையை நோக்கி முன்னேற சிறப்பான அடித்தளம் அமைத்தார்.
அதிரடியாக விளையாடிய அகமது தனது அரை சதத்தை பூர்த்தி செய்து 51 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த நபி(1), சசய்(0), நஜிப் சட்ரன்(4), நெய்ப்(0), தவ்லத் சட்ரன்(9) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால் மறுமுனையில் நங்கூரமாக நின்ற ஷென்வாரி தனது அரை சதத்தை பூர்த்தி செய்து சதத்தை நோக்கி முன்னேறினார்.
எனினும் துரதிருஷ்டவசமாக 96 ரன்களில் அவுட்டானார். எனினும் ஹமீத் ஹசனும், ஷபூர் சட்ரனும் சிறப்பாக விளையாடினர். இறுதியில் ஆப்கான் 1 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.


Sri Lanka Rupee Exchange Rate