இலங்கைக்கு இரண்டாவது வெற்றி
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடந்த உலக கோப்பை தொடர் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், இலங்கை, வங்கதேச அணிகள் மோதின. இம்மைதானத்தில் வங்கதேச ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_795.html
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடந்த உலக கோப்பை தொடர் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், இலங்கை, வங்கதேச அணிகள் மோதின. இம்மைதானத்தில் வங்கதேச அணி விளையாடியது இதுவே முதன் முறை. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார். வங்கதேச அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக அமைய, இலங்கை அணிக்கு திரிமான்னே, தில்ஷன் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தது. மொர்டசா வீசிய முதல் ஓவரில் ‘கேட்ச்’ வாய்ப்பில் இருந்து தப்பிய திரிமான்னே, திரிமான்னே அரைசதம் கடந்தார்.முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில், ஒரு வழியாக திரிமான்னே (52) அவுட்டானார்.
மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ஒருநாள் அரங்கில் 21வது சதம் கடந்தார். தனது 400 வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய சங்ககரா, 60 ரன்னில் கொடுத்த எளிய வாய்ப்பை நழுவவிட்டார் மோமினுல் ஹக். இதைப் பயன்படுத்திக் கொண்டு விளாசிய சங்ககரா, 73வது பந்தில் ஒருநாள் அரங்கில் 22வது சதம் அடித்தார்.இந்த ஜோடியை பிரிக்க வங்கதேச அணி கேப்டன் மொர்டசா எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. இலங்கை அணி 50 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 332 ரன்கள் எடுத்தது. சங்ககரா (105), தில்ஷன் (161) அவுட்டாகாமல் இருந்தனர்.கடின இலக்கைத் துரத்திய வங்கதேச அணிக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. தமிம் இக்பால் (0), அனாமுல் ஹக் (29), சர்கார் (25), மோமினுல் ஹக் (1) மகமதுல்லா (28) என, வரிசையாக ஏமாற்றினர். சற்று தாக்குப்பிடித்த சாகிப் அல் ஹசன் மட்டும் 46 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் (36), மொர்டசா (7) அணியை கைவிட அணியின் தோல்வி உறுதியானது. அடுத்த சில நிமிடத்தில் அரைசதம் அடித்த சபிர் ரஹ்மான் (53), டஸ்கின் அகமது (0) இருவரும் மலிங்காவின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகினர்.வங்கதேச அணி 47 ஓவரில், 240 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஆட்டநாயகன் விருதை தில்ஷன் தட்டிச் சென்றார். ஏற்கனவே, ஆப்கனை வென்ற இலங்கை அணி, உலக கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது



Sri Lanka Rupee Exchange Rate