ஐ.எஸ்-யில் இணையச் சென்ற சிறுமியின் கடைசி நிமிடங்கள்.. பொலிசார் அதிரடி
ஐ.எஸ் அமைப்பில் இணைய சிரியா செல்ல முயன்ற சிறுமி ஒருவரை பொலிசார் கடைசி நேரத்தில் சுற்றிவளைத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகர...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_247.html

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ், ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தங்களது இயக்கத்தில் இணைய ஐ.எஸ் தீவிரவாதிகள் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த, கென்யன் வம்சாவளி சிறுமி(15) ஒருவரை தெரிவு செய்துள்ளனர்.
கடந்த 5ம் திகதி காலை அச்சிறுமி கேப்டவுனில்(cape town) இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் விமானத்தின் மூலம் சவுதி செல்லும் இவர், பிறகு துருக்கி வழியாக சிரியா சென்றடைய திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் இவரை பொலிசார் சுற்றிவளைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் சிறுமியை பிடித்த தகவலை, அவரது பெற்றோருக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர். தற்போது விசாரணைக்கு பிறகு சிறுமி வீட்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.