ஜப்பான் அழகு ராணிக்கு ஏற்பட்ட விபரீதம்
ஜப்பானின் புதிய அழகுராணியாக தெரிவு செய்யப்பட்ட யுவதியொருவர், ஜப்பானிய தன்மையுடன் இல்லையென்ற விமர்சனங்களுக்கு இலக்காகியுள்ளார். அண்மையில் ந...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_688.html
அண்மையில் நடைபெற்ற மிஸ் ஜப்பான் 2015 அழகுராணி போட்டியில் அரியானா மியாமோட்டோ எனும் யுவதி முதலிடம் பெற்று முடிசூட்டப்பட்டார்.
எதிர்வரும் மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளிலும் ஜப்பானின் சார்பில் இவர் பங்குபற்றவுள்ளார். ஆனால், இவர் ஜப்பானியரைப் போன்ற தோற்றம் கொண்டவரல்லர் என சிலர் விமர்சிக்கின்றனர்.
ஜப்பானின் நாகசாகி நகரில் 1994 ஆம் ஆண்டு பிறந்தவர் அரியானா மியாமோட்டோ.
அரியானாவின் தாயார் ஒரு ஜப்பானியர். தந்தை ஓர் ஆபிரிக்க அமெரிக்கர். இதனால் கலப்புத்தன்மையான தோற்றத்தில் அரியானா காணப்படுகிறார்.
மிஸ் யூனிவர்ஸ் ஜப்பான் அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது யுவதி அரியானா ஆவார்.
இந்நிலையில், அவர் ஜப்பானிய அழகுராணியாக தெரிவு செய்யப்பட்டதை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஜப்பானிலுள்ள மக்களில் சுமார் 98 சதவீதமானோர் ஒரே இனத்தவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தான் கலப்பினத்தவராக இருப்பதால் பாடசாலைக் காலத்திலும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக அரியானா கூறுகிறார்.
பாடசாலையில் சிலர் குப்பைகளையும் என் மீது வீசியுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ டெம்பிள் பல்கலைக்கழகத்தின் ஆசிய கற்கைகள் பிரிவு பேராசிரியரான ஜெப் கிங்ஸ்டன் இது தொடர்பாக கூறுகையில்,
பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத்துறைகளில் அண்மைக்காலத்தில் கலப்பினத்தவர்களை ஜப்பான் அரவணைத்துள்ளது.
ஆனால், "அழகுத் தடையை" மீறிய முதல் நபராக அரியான மியாமோட்டோ விளங்குகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
பழைமைவாதமும் மாற்றத்தை எதிர்ப்பதுமான ஒரு நாட்டில் அரியானா அழகுராணியாக முடிசூட்டப்பட்டமை ஜப்பானின் வித்தியாசமான பக்கத்தை சர்வதேச ரீதியாக வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.