சிங்கள பிரதேசங்களில் தமிழில் தேசிய கீதத்தை பாட செய்து இனவாதத்தை தூண்ட சூழ்ச்சி!
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடங்களின் போது சிங்களவர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் நடைபெறும் வைபவங்களில் தேசிய கீததத்தை தமி...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_748.html

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கில் இனவாத ரீதியான செயற்பாடுகளில் சில குழுக்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக தற்போது நாடு முழுவதும் இனவாத குழுக்கள் சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறு தமிழில் தேசிய கீதம் பாடப்படும் இடங்களில் கூடியிருக்கும் நபர்களை கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைப்பதே இந்த குழுக்களின் நோக்கம் என கூறப்படுகிறது.
தமிழில் தேசிய கீதம் பாடுவதை இனவாத வஞ்சகர்களே எதிர்க்கின்றனர் என்ற தலைப்பில் சுயாதீன தொலைக்காட்சியில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
அதில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழில் தேசிய கீதத்தை பாடுவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பான காட்சிகள் காட்டப்பட்டன. தனது இந்த உரையை ஒளிப்பரப்பியதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, சரத் வீரசேகர, இழப்பீடு கோரி சுயாதீன தொலைக்காட்சிக்கு கோரிக்கை பத்திரம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தொலைக்காட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுடன் வழக்காடவும் தாம் தயார் என சுயாதீன தொலைக்காட்சியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.