ஏமனின் ஜனாதிபதியை கொன்றால் 20 கிலோ தங்கம் இலவசம்…. அல்கொய்தாவின் அதிரடி அறிவிப்பு
ஏமனின் முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்பவர்களுக்கு 20 கிலோ தங்கம் வழங்கப்படும் என அல்கொய்தா அமைப்பு அறிவித்துள்ளதாக பரபரப்பான செய்திகள் வெளியாக...

http://kandyskynews.blogspot.com/2015/04/20_10.html

ஏமனின் முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்பவர்களுக்கு 20 கிலோ தங்கம் வழங்கப்படும் என அல்கொய்தா அமைப்பு அறிவித்துள்ளதாக பரபரப்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏமன் நாட்டின் உள்நாட்டு போரில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல வாரங்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை அல்கொய்தா அமைப்பினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஏமன் நாட்டின் முன்னால் ஜனாதிபதியான Ali Abdullah Saleh மற்றும் அவரது ஹவுதி ஆதரவு படையினரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 20 கிலோ தங்கம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஏமனில் போர் வலுத்துவரும் நிலையில் கடந்த வாரம் Mukalla சிறை வளாகத்திற்குள் அதிரடியாக புகுந்த ஏமனை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள், அங்கிருந்த உள்நாட்டு அல்-கொய்தா தலைவர் உள்பட பல பேரை சிறையிலிருந்து மீட்டு சென்றது.
கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நாடும், ராணுவத்தினருக்கு சவுதி அரேபியாவும் உதவி புரிந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.
கடந்த வாரம் ஏமன் தலைநகரான சனாவை(Sana) கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியபோதிலும், சவுதி அரேபியாவின் ராணுவ தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இந்நிலையில், உள்நாட்டு போர் நடைபெறும் நேரத்தில் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பல அட்டூழியங்களை செய்து வருவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஏமன் உள்நாட்டு போரில், அப்பாவி குடிமக்கள் சேர்த்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா சபை கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது