ஜேர்மன் விமான விபத்துக்கு துணை விமானி காரணம் இல்லையா? புதிய தகவல்களால் பரபரப்பு
ஜேர்மன் விமானத்தை ஹேக்கிங்’ மூலம் கடத்தி, பிரான்ஸ் மலையில் மோத வைத்து விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என வெளியான புதிய தகவல்கள் பரபரப்பை ஏற்பட...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_754.html

ஜேர்மன் விமானத்தை ஹேக்கிங்’ மூலம் கடத்தி, பிரான்ஸ் மலையில் மோத வைத்து விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என வெளியான புதிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்க்ஸ் விமானத்தில் பயணித்த 150 பேரும் பலியாகினர்.
இந்த விபத்திற்கு, துணை விமானியான Andreas Lubitz காரணம் என இரண்டு கருப்பு பெட்டிகள் மூலம் கிடைத்த தகவல்கள் உறுதி செய்தன.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து உயர் அதிகாரியான Matt Andersson கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, ஜேர்மன் விமானத்தை வேறொரு கும்பல் ஹேக்கிங்(Electronic hacking) மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதை பிரான்ஸ் மலையில் மோத செய்து விபத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஜேர்மன் விமானத்தை கீழ் நோக்கி அதிவேகமாக செலுத்தியது உறுதி செய்யப்பட்டிருந்தபோதிலும், அதை துணை விமானி தான் செய்தாரா? என்பதை 100 சதவிகிதம் உறுதி செய்யவில்லை.
போர் விமானங்கள் மற்றும் ஜனாதிபதிகள் பயணிக்கும் விமானங்களில் ‘ஹேக்கிங்’ வேலைகளை செய்ய முடியாதவாறு அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது போல் சாதாரண பயணிகள் விமானங்களில் சிறப்பு அம்சங்கள் இல்லை.
எனவே விபத்துக்குள்ளான ஜேர்மன் விமானத்தை ’ஹேக்கர்கள்’ தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், விமான விபத்து குறித்து தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதால், 100 சதவிகித உண்மை தெரியவரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்