வீட்டுக்கு சென்று புதுவருடத்தை கொண்டாட சில கைதிகளுக்கு அனுமதி!
வீட்டுக்கு சென்று புதுவருடத்தை கொண்டாடி மீண்டும் சிறைச்சாலை திரும்புவதற்கு சில கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. நன்னடத்தை அடிப்படையில் இ...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_210.html
வீட்டுக்கு சென்று புதுவருடத்தை கொண்டாடி மீண்டும் சிறைச்சாலை திரும்புவதற்கு சில கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
நன்னடத்தை அடிப்படையில் இவ்வாறு கைதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட காலப்பகுதியில் வீட்டுக்கு சென்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக புதுவருடத்தை கொண்டாடுவதற்கு சில கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
இதனை சிறைச்சாலைகள் ஆணையாளர் எம்.பீ.ஆ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல், கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படாத வேறும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நன்னடத்தை கைதிகளுகளுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
புதுவருடத்தின் பின்னர் சிறைச்சாலை திரும்பும் வாக்குறுதியின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
நிபந்தனை அடிப்படையிலேயே இந்த கைதிகளுக்கு புதுவருடத்தை கொண்டாட சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது.